Breaking News

தனியார் நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..!

நிறுவனத்தில் நள்ளிரவில் தீ விபத்து! 2 பேர் உயிரிழப்பு..!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் சிசிடிவி, கேமரா, கணினி உதிரிபாகம் விற்கும் தனியார் நிறுவனம் இயங்கி வந்தது.இன்று நள்ளிரவில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட திடீர் தீ மளமளவென அலுவலகம் முழுவதும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் 2 பேர் சிக்கி கொண்டனர். நள்ளிரவு என்பதால் தீ விபத்து குறித்து தீயணைப்புதுறைக்கு அதிகாலையிலேயே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இதில் சிக்கியிருந்த இருவர் தீக்காயங்களுடன் அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.

ஆனாலும் அவர்கள் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் செல்லும் வழியிலேயே தீ விபத்தில் சிக்கி கோபிநாத், சதீஷ் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர் . நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment