MIGRRAINE: ஒற்றைத் தலைவலி அறிகுறிகள் மற்றும் குணப்படுத்தும் உணவுகள்!!

0
169

 

அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது தலைவலி பாதிப்பை அனுபவித்திருப்பீர்கள்.சாதாரண தலைவலி சில நிமிடங்களில் சரியாகிவிடும்.ஆனால் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் அது கடுமையான வலியை கொடுக்கும்.

 

தலையில் ஒரு பக்கத்தில் மட்டும் கடுமையான வலி ஏற்படுவதை தான் ஒற்றைத் தலைவலி என்கின்றோம்.இந்த பாதிப்பு குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவருக்கும் ஏற்படுகிறது.சாதாரண தலைவலியாக இருந்து பிறகு கடுமையான ஒரு பக்க வலியாக மாறுகிறது.தலையில் வலி ஏறி இறங்கும்.சில நேரம் கடுகடுக் என்று தலைவலிக்கும்.

 

அறிகுறிகள்:

 

1)ஒரு பக்க தலைவலி

2)தலையில் கடு கடுப்பாக வலி ஏற்படுதல்

3)குமட்டல்

4)வாந்தி

5)உடல் சோர்வு

6)மனநிலை மாற்றம்

7)எரிச்சல் உணர்வு

8)பசியின்மை

9)தாங்கமுடியாத தலைவலி

10)பேச்சில் தடுமாற்றம்

 

ஒற்றை தலைவலியை போக்கும் உணவுகள்:

 

1)ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஒற்றைத்தலைவலி குணமாகும்.

 

2) மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.

 

3)பால் குடிப்பதால் ஒற்றைத் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.இதில் இருக்கின்ற வைட்டமின் பி ஒற்றைத் தலைவலியை குணமாக்க உதவுகிறது.

 

4)சூடான தேநீர் மற்றும் காபி குடித்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.சுக்கு,கொத்தமல்லி,சேர்த்த பிளாக் டீ ஒற்றைத் தலைவலியை உடனடியாக குறைக்கும்.

 

5)ப்ரோக்கோலி,இஞ்சி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.ஆனால் அஜினமோட்டா,உப்பு,பனீர்,வெண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் ஒற்றைத் தலைவலியை உண்டாக்கும்.எனவே சரியான உணவுமுறை பழக்கத்தை கடைபிடித்து ஒற்றைத் தலைவலியில் இருந்து மீள்வது நல்லது.

Previous articleஇந்த ஒரு பொருளை தண்ணீரில் போட்டு குடித்து வந்தால்.. ஒரே மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடை குறையும்!!
Next articleஅடேங்கப்பா.. வேஸ்ட் என்று தூக்கி எறியும் மாதுளை தோலில் இத்தனை நன்மைகள் இருக்கா?