இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6ஆக பதிவு!

Photo of author

By Parthipan K

இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6ஆக பதிவு!

Parthipan K

இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6ஆக பதிவு!

இமாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 3.6 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலா பகுதியில் இருந்து சுமார் 56 கி.மீ. வடக்கு பகுதியில் நேற்று இரவு 10.38 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் உருவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருள் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக வட மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.