இன்று காலையிலேயே மக்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் பாலின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆரோக்கியா பால் நிறுவனம் தன்னுடைய பால் பாக்கெட்டுகளுக்கு ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் என்ற அளவில் உயர்த்தி இருக்கிறது. இவ்வாறு பால்வினை உயர்த்தப்பட்டு இருப்பது நடுத்தர மக்களின் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையும்.
ஆரோக்கிய பால் நிறுவனத்தின் அறிவிப்பின்படி அதிக கொழுப்பு நிறைந்த அதாவது நிறை கொழுப்பு பால் பாக்கெட் களுக்கு இதுவரை 76 ரூபாய் லிட்டருக்கு வசூல் செய்து வந்த நிலையில் தற்பொழுது 4 ரூபாய் உயர்த்தி 80 ரூபாயாக இன்று முதல் விற்பனை செய்ய தொடங்கி இருக்கிறது.
பால் விலையை தொடர்ந்து ஆரோக்கிய நிறுவனமானது தங்களுடைய தயாரிப்பில் வெளியாக கூடிய தயிரின் விலையையும் ஒரே நேரத்தில் உயர்த்தி இருப்பது மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அதன்படி, இதுவரை 400 கிராம தயிர் 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவித்திருக்கிறது. மேலும், மோர் பாக்கெட்டைகளின் உடைய அளவு குறைக்கப்படுவதாகவும், 125 ml மோர் பாக்கெட் 120 ml எனவும் 180 ml மோர் பாக்கெட் 160 ml எனவும் குறைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக ஆரோக்கிய நிறுவனத்தின் உடைய இந்த முக்கிய மாற்றங்கள் மற்றும் விலை உயர்வுகள் இன்று முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் இனிமேல் ஆரோக்கிய நிறுவனத்தில் பால் தயிர் மற்றும் மோர் போன்றவற்றை வாங்குபவர்களுக்கு இவைதான் விலை நிர்ணயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.