அடிக்குற வெயிலுக்கு உடல் களைப்பை போக்கும் மில்க் ஷேக் ரெசிப்பீஸ்!! வெறும் 2 நிமிடத்தில் செய்திடலாம்!!
கோடை வெயிலில் உங்கள் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள ஐஸ் வாட்டர்,செயற்கை நிறமூட்டப்பட்ட குளிர் பானங்கள் குடிப்பதை தவிர்த்து ஆரோக்கியம் நிறைந்த நுங்கு மற்றும் முலாம் பழத்தில் சுவையான மில்க் ஷேக் தயாரித்து குடியுங்கள்.
1.நுங்கு மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்:-
1)நுங்கு – 1 கப்
2)பால் – 1 கப்
3)வெள்ளை சர்க்கரை – 1/2 கப்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் பால் ஊற்றி சூடாக்கவும்.ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
இந்த பாலை நன்கு ஆறவிடவும்.இதனிடையே ஒரு கப் நுங்கு எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பால் நன்கு ஆறியதும் மில்க் ஷேக் செய்ய வேண்டும்.முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக் கொள்ளவும்.அதில் ஆற வைத்த பாலை ஊற்றவும்.பிறகு அதில் நறுக்கிய நுங்கு துண்டுகளில் 3/4 பங்கு அளவு சேர்த்து ஒரு சுத்து விடவும்.
பிறகு சுவைக்காக வெள்ளை சர்க்கரை சேர்த்து மைய்ய அரைக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி நறுக்கிய நுங்கு துண்டுகளை சேர்த்தால் சுவையான நுங்கு மில்க் ஷேக் தயார்.
2.முலாம்பழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்:-
1)முலாம்பழ துண்டுகள் – 1 கப்
2)பால் – 1 கப்
3)நாட்டு சர்க்கரை – 1/2 கப்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் பால் ஊற்றி சூடாக்கவும்.ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
பிறகு ஒரு ஓரு கீற்று முலாம்பழத்தை தோல் மற்றும் விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்துக் கொள்ளவும்.அதில் ஆற வைத்த பாலை ஊற்றவும்.பிறகு நறுக்கிய முலாம்பழ துண்டுகளை சேர்த்து ஒரு சுத்து விடவும்.
பிறகு சுவைக்காக நாட்டு சர்க்கரை சேர்த்து மைய்ய அரைக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றினால் சுவையான முலாம்பழ மில்க் ஷேக் தயார்.