நம் அன்றாட உணவுப் பொருட்களில் முக்கிய அங்கம் வகிப்பது பால் தான்.தினமும் பால்,டீ,காபி போன்ற பானங்கள் பருக கால் லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை வாங்குகிறோம்.பாலில் கால்சியம் சத்து நிறைந்திருபதால் தினமும் அவசியம் ஒரு கிளாஸ் பால் பருக வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் இன்றியமையாத ஒன்று.பாலில் புரதம்,கால்சியம்,மெக்னீசியம்,மாவுச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பால் குடித்து வந்தால் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து கிடைக்கும்.மாதவிடாய் நின்ற பெண்கள்,வயதானவர்கள் தினமும் 500 மில்லி பால் பருக வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பால் குடித்தால் பருக்கள் வந்துவிடும் என்று பயந்து பெண்கள் அதை தவிர்கின்றனர்.அதேபோல் பாலில் கொழுப்புச்சத்து உடல் எடையை அதிகரித்துவிடும் என்று அஞ்சி பலரும் அதை தவிர்க்கின்றனர்.உண்மையில் பால் பருகினால் உடல் எடை குறையும்.பாலில் உள்ள கொழுப்புச்சத்து நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்றாகும்.
பாலில் இருக்கின்ற வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.பாலில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.இவ்வளவு நன்மைகள் நிறைந்த பாலில் தற்பொழுது அதிகளவு கலப்படம் நடக்கிறது என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
நாம் அன்றாடம் பால் பயன்படுத்துகிறோம்.முன்பெல்லாம் நகர்புறங்களில் தான் பாக்கெட் பால் பயன்பாடு இருந்தது.ஆனால் தற்பொழுது கிராம புறங்களிலும் பாக்கெட் பால் பயன்பாடு அதிகரித்துவிட்டது.இதனால் லாப நோக்கத்திற்காகவும்,உற்பத்தியை அதிகரிக்கவும் பாலில் கலப்படம் செய்படுகிறது.
பால் கலப்படம்:
முன்பெல்லாம் பாலில் தண்ணீர் கலப்படம் அதிகம் இருந்தது.ஆனால் தற்பொழுது யூரியா,மாவு,பார்மலின்,சவர்க்காரம் போன்ற இரசாயனப் பொருட்கள் கலக்கப்படுகிறது.பாலில் திக்நஸ் அதிகரிக்கவும்,செயற்கையான முறையில் உற்பத்தியை அதிகரிக்கவும் இதுபோன்ற கலப்படம் செய்யப்படுகிறது.
இந்த கலப்படம் செய்யப்பட்ட பாலை பருகினால் வயிற்றுவலி,குமட்டல்,வயிறு அசௌகரியம்,புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.பாலில் கலக்கப்படும் யூரியா சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்.எனவே முடிந்தவரை பாக்கெட் பால் பாலை தவிர்ப்பது நல்லது.