கனிம வளங்கள் கொள்ளை – முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உதவியாளர் மீது மிரட்டல் புகார்!!

0
201
#image_title

“கனிம வளங்கள் கொள்ளை – முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உதவியாளர் மீது மிரட்டல் புகார்!!

“மோசடி செய்த சுரங்கம் மூலம் அரசிற்கு 3000 முதல் 4000 கோடி வரி வர வேண்டும் – ஷங்கர்”….

முன்னாள் அமைச்சர் சி.வி ஷண்முகம் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் ஆகியோருக்கு எதிராக தான் போட்டுள்ள கனிம வளங்கள் மோசடி வழக்கில் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் மேலும் முறையான அனுமதி இல்லாமல் அரசாங்கத்திற்கு எதிராக சுரங்கம் தோண்ட அனுமதி வழங்கியுள்ளதாகவும் எனவே இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் தனி நபர் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த ஷங்கர் என்பவர் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்….

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்…..

கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி தட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர் இவருடைய தந்தை கிருஷ்ணகிரி பகுதியில் கனிம வளங்கள் உடைய நிலம் ஒன்றை வாங்கியதாக கூறப்படுகிறது….

கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனது தந்தை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தட்டக்கல் என்ற இடத்தில் ஒன்றரை ஏக்கர் கனிம வளங்கள் நிறைந்த நிலத்தை என் தந்தை வாங்கியுள்ளார்….

அதன் பின்பு அவர் கடும் நோய்வாய்ப்பட்டு பின்பு என்னிடம் இது போன்ற இடம் வாங்கி இருந்தேன் என்று கூறினார். அதன் பேரில் நான் அங்கு சென்று பார்த்த பொழுது அந்த நிலத்திலிருந்து கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு சவடு மணல் போட்டு மூடி இருந்தனர்….

பக்கத்தில் சிலிடப்பட்டிருந்த குவாரியில் இருந்து சட்டவிரோதமாக அக்ரிமெண்ட் பதிவு செய்து அவர்களிடத்திலிருந்து எங்கள் இடத்தில் இருந்த கனிம வளங்களை திருடியதாகவும், முப்பதாயிரம் கியூபிக் மீட்டர்களை திருடி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்….

இது தொடர்பாக புகார் அளிக்கும் பொழுது முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உதவியாளர் ஆனந்த் என்னிடம் நேரடியாக தொடர்பு கொண்டு மிரட்டியதாகவும், அந்த இடத்திற்கு சென்றாள் உங்கள் மீது குண்டர் சட்டத் போட்டப்படும் என்றும் நீங்கள் வேறு எங்கேயும் சென்றாள் அமைச்சர் சி.வி சண்முகம் பார்த்துக் கொள்வார் என்ன மிரட்டியதாகவும் கூறியுள்ளார்….

மேலும் கனிம வளத்துறை கிருஷ்ணகிரி எல்.சுரேஷ் என்பவர் சங்கர் என்ற தனிநபரை வைத்து மிரட்டியதாகவும், விசாரித்தால் சசிகலா சொல்லி சுரேஷ் மிரட்டியதாகவும் கழுத்தை அறுத்து விடுவேன் என்றும் அவர் கூறியதாக கூறியுள்ள இவர் அந்த காலகட்டத்தில் சசிகலா சிறையில் இருந்ததாகவும் எப்படி இவர் பேசி இருப்பார் என்றும் கேள்வி எழுப்பினார்….

பின்பு சட்டப் போராட்டம் நடத்தி உயர்நீதிமன்றத்தை நாடியதாகவும், அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையை விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டதாக கூறியுள்ள அவர் மாவட்ட ஆட்சியரிடம் தகுந்த ஆதாரத்தை கொடுத்தும் அவர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் இது தொடர்பாக இன்று நேரடியாக சந்தித்து சிபிசிஐடி அல்லது தனி நபர் குழுவை அமைத்து அங்கு என்ன நடந்தது என்று விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்துள்ளதாக கூறினார்….

மாதம் 300 கோடி ரூபாய் அந்த கல்குவாரியில் இருந்து லாபம் ஈட்டி உள்ளதாக கூறியுள்ள இவர், கொலை மிரட்டல் விடுத்த ஆனந்த் மீது சீஃப் செகரட்டரி மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளதாகவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் உயர்நீதிமன்றம் என்னுடைய பெட்டிஷனை அனுமதி தந்ததாகவும், அதன் பின்பு ஒரு 67 கோடி ரூபாய் வரி விதித்துள்ளதாகவும் அது குறைவான தொகை என்றும் நியாயப்படி அரசிற்கு ஏறத்தாழ 3000 அல்லது 4000 கோடி வரி வந்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் தன்னை கொன்று விடுவதாக மிரட்டிய ஆடியோக்களும், மற்றும் முறையான அனுமதியில்லாமல் கல் குவாரி நடத்த அனுமதி கொடுத்த போலி பத்திரங்களையும் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆகவே அந்த இடத்தில் சிபிசிஐடி மற்றும் தனி நபர் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் வைத்துள்ளார்.

Previous articleதிமுக நகர மன்ற தலைவரின் அரசு காரை இளைஞர் ஒருவர் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு!!
Next articleமக்களின் தேவைகளை திருப்தி படுத்த ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்-பிரதமர் மோடி!!