மக்களின் தேவைகளை திருப்தி படுத்த ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்-பிரதமர் மோடி!!

0
158
#image_title

மக்களின் தேவைகளை திருப்தி படுத்த ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்-பிரதமர் மோடி!

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரயில் நிலையத்திலிருந்து புதுடெல்லி வரையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாட்டில் இயக்கப்படும் 11 வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இதுவாகும்.

பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தாலும் அவை அனைத்தும் 130 கி.மீ வேகத்திலேயே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரயில் மூலம் போபால் முதல் புதுடெல்லி இடையிலான பயண தூரம் 3 மணி நேரம் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவையை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் நமது நாட்டின் திறன் திறமை மற்றும் நம்பிக்கை பறைசாற்றுவதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திகழ்வதாகவும் சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்பிற்கு புதிய உத்வேகம் அளித்திருப்பதாக குறிப்பிட்டார்.

 

கடந்த 9 ஆண்டுகளாக அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக இந்திய ரயில்வேக்கள் உலகிலேயே இன்று பாதுகாப்பான மற்றும் அதிக செயல் திறன் கொண்ட ரயில்வே நெட்வொர்க்காக மாறி இருப்பதாக தெரிவித்த பிரதமர் இந்திய ரயில்வேய்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு நிறைந்ததாக மாறி உள்ளதாக குறிப்பிட்டார்.

 

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்களுக்கு அதிக தேவை இருப்பதாக தெரிவித்த நாட்டிலுள்ள இளைஞர்களிடம் இந்த ரயில் மிகப் பெரும் ஹிட் அடித்து இருப்பதாக தெரிவித்தார்.

 

வந்தே பாரத் திரையில் தொழில்நுட்பம் ரீதியாக தூய்மையான முன்னேறி அம்சமும் குறித்த நேரமும் கொண்டவை என தெரிவித்த பிரதமர் இந்த ரயில்களில் டிக்கெட் கள்ளச் சந்தையில் விற்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது இல்லை என தெரிவித்தார்.

 

மக்களை தாஜா செய்வதிலேயே முந்தைய அரசுகள் மும்முறமாக இருந்ததாக தெரிவித்த பிரதமர் பொதுமக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற தங்களின் அரசு ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பதாக பிரதமர் மோதி தெரிவித்தார்

author avatar
Savitha