மினி பஸ்.. ஆர்வம் காட்டாத தனியார்!! இலவச பயணம் அறிவிக்குமா தமிழக அரசு!!

0
12
Mini bus.. private not interested!! Tamilnadu government will announce free travel!!
Mini bus.. private not interested!! Tamilnadu government will announce free travel!!

சமீபத்தில் பஸ்கள் இயக்கத்தின் தட்டுப்பாட்டினால் தனியார் மினி பஸ்ஸின் டெண்டர்களை வெளியிட்டுள்ளது தமிழக போக்குவரத்து கழக அரசு. இதற்கு பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்ததே. இதனால் பெரும்பாலும் இலவச பஸ்களுக்காக காத்திருந்து பெண்கள், குழந்தைகள் அதில் ஏறி பயணம் செய்ய முற்படுகின்றனர்.

ஒரு தனியார் மினி பஸ் வாங்குவதற்கே குறைந்தது 25 லட்சம் இருந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும். அதிலும் டீசல் விலை அதிகரிப்பு, உதிரி பாகங்களின் விலை உயர்வு ஆகியவை நெருடலை ஏற்படுத்துகின்றன. மினி பஸ் இயக்குவதில் அதிக தூரம் இயக்க ஒப்புதல் அல்லது டிக்கெட் விலை உயர்வு ஆகியவை பற்றி அரசு எதுவும் வெளியிடவில்லை. இதனால் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் மினி பஸ் இயக்க ஆர்வம் கோரவில்லை. இருப்பினும், மினி பஸ் டிக்கெட்டையும் இலவசம் என்று அறிவித்து அரசு அதற்குரிய செலவுகளை தந்தால் இலாபகரமாக இருக்கும் என கருத்து தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அரசு என்ன தகவல் வெளியிடப் போகிறது? என்ற ஆர்வம் தனியார் பஸ் ஓனர்களிடம் காணப்படுகின்றது. இலவச பயணம் என்று குறிப்பிட்டு விட்டு தனியாருக்கு டெண்டர் கொடுப்பதை அரசு கவனம் செலுத்தி வருவது என்ன நியாயம்? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Previous articleதவெக, முஸ்லிம் லீக் கட்சியினர் கூட்டணி!! பாஜகவை எதிர்க்கும் நம்பிக்கை!!
Next articleமும்மொழி கொள்கை பிரச்சனையில்.. ரஜினியின் பதில்!! அட இது புதுசா இருக்கே!!