அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! அதிர்ச்சியில் முதல்வர்!

Photo of author

By Anand

அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! அதிர்ச்சியில் முதல்வர்!

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளையும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது.அந்த வகையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த கொரோனா பாதிப்பை கட்டுபடுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் தான் கொரோனா தொற்றை தடுக்க உதவும் முக்கிய நடவடிக்கையாக சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் ஒவ்வொரு மாநில அரசும் கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்கும் விதமாக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் அமைச்சர் ஒருவருக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் பொது மக்களிடையேயும் அரசியல் தலைவர்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவும், அம்மாநிலத்தின் வீட்டுவசதி அமைச்சருமான ஜிதேந்திர அவ்ஹாத் பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்
அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்

அங்கு நடந்த பரிசோதனையில் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஒரு வாரகாலம் தன்னுடைய குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் பாதுகாவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அதிர்ச்சி அடைந்துள்ளார். எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து விசாரித்த போது புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத் ஏப்ரல் மாத தொடக்கத்தில் மும்ரா காவல்நிலைய இன்ஸ்பெக்டருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அடுத்த சில நாட்களில் அந்த இன்ஸ்பெக்டருக்கு  கொரோனா பாதிப்பு உறுதியானது.

கோரனாவால் பாதிக்கப்பட்ட இந்த இன்ஸ்பெக்டர் மும்ராவில் தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை விசாரிக்கும் பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் ஆலோசனை நடத்திய ஜமாஅத் உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லாததால், இவருக்கு எங்கிருந்து கொரோனா வைரஸ் பரவியது என்பதை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

தற்போது அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அவருடன் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பதையும் கண்டறிந்து வருகின்றனர்.

மேலும் படிக்க : டாக்டர் வில்சனை விவகாரத்தில் கிறிஸ்துவ மத சிக்கல் உள்ளது : சர்ச்சையை கிளப்பும் அரசியல் விமர்சகர்!

மேலும் படிக்க : பத்திரிக்கையாளர் பனிமலருக்கு நிர்வாண படத்தை அனுப்பிய பிரபலம்! சர்ச்சையை கிளப்பும் பனிமலர்

மேலும் படிக்க : ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி.! திமுக முன்னாள் அமைச்சரின் கல்லூரியில் நடக்கும் கெடுபிடி.!!