இன்று ரமலான் நோன்பு தொடக்கம்.! ஊரடங்கால் வீட்டிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்.!!

0
121

இன்று ரமலான் நோன்பு தொடக்கம்.! ஊரடங்கால் வீட்டிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்.!!

ரம்ஜான் நோன்பு பண்டிகை தொடக்கம் இன்று தொடங்குகிறது. ஊரடங்கு உத்தரவால் இஸ்லாமியர்கள் அவரவர் வீட்டிலேயே தொழுகை நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் ரமலான் பிறை கண்டு நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் வழக்கம். பொதுவாக ஆண்டுதோறும் மசூதிகளுக்கு சென்று அதிகாலையில் தொழுகை நடத்துவார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மசூதிகளில் கூட்டமாக கூடாமல் அரசின் உத்தரவை கடைபிடித்து அவரவர் வீட்டிலேயே தொழுகை நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று அதிகாலையில் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்து ரமலான் தொழுகை நடத்தினர். தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் இருப்போர் வீடுகளில் தனிமனித விலகலுடன் ரமலான் நோன்பை தொழுதனர். மேலும் வருடத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் கூடும் சவுதி மெக்கா மதினா போன்றவை அரேபிய அரசால் மூடப்பட்டுள்ளன.

சவுதியில் உள்ள மெக்கா, மதினா ஆகிய இரு இடங்கள் இஸ்லாமியர்களின் புனித தலங்களாக இருந்து வருகின்றன. இந்த இடங்களில் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகைகள் நடப்பது வழக்கமான ஒன்று. இதனால் உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் லட்சக்கணக்கில் அங்கு கூடி தொழுவது புண்ணியமாப பார்க்கப்படுகிறது. சவுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுனர். மேலும் இதுவரை சவுதியில் 103 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க உம்ரா பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.

author avatar
Jayachandiran