பாமக, தவெக-வை வம்பிற்கு இழுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!!

0
83
Minister Anbil Mahesh pulled into the BAMKA-Vaim!!
Minister Anbil Mahesh pulled into the BAMKA-Vaim!!

திருச்சி: கலைஞர் அறிவாலயத்தில் இன்று திமுக மண்டல தொழில்நுட்ப அணி ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் தலைமை ஏற்று நடத்தினர். அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியபோது “நாம் செய்யும் மக்கள் னால திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது சாதாரணமான விசியம் அல்ல. ஆகையால் சமூக வலை தளங்களில் நம்மை பற்றி விமர்சனங்கள் பரவும் போது, அதை நாம் திசைமாற்ற வேண்டும்.

நாம் செய்த திட்டங்களை பரப்ப வேண்டும் என தெரிவித்தார். குறிப்பாக சட்ட பேரவையில் எதிர் கட்சியினர் நம்மை குறை கூறும் போது, உடனே சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எழுந்து உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள் என பேசினால், அவர்கள் அமைதியாக அமர்ந்து விடுவார்கள் என குறிப்பிட்ட அமைச்சர், அதே போல் நீங்கள் சமூக வலை தளங்களில் நம்மைப் பற்றி விமர்சனங்களை பரப்புவோர்கள் அனைவரையும் திசை திருப்ப வேண்டும் என குறிப்பிட்டு பேசினார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான பணிகளை நீங்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக தமிழ்நாட்டின் இளம் வாக்காளர்கள், முதல் வாக்காளர்களை நாம் அணுகி திமுகவிற்கு ஆதரவாக வாக்குகளை சேகரிக்க வேண்டும். ஒரு சிலர் போல வீட்டில் அமர்ந்து கொண்டு (work from home job) தினம் ஒரு அறிக்கை விட்டுக்கொண்டு  அரசியல் செய்பவர்கள், நாம் அல்ல என தெரிவித்த அவர், களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக செயல்பட்டு வெற்றியை நிச்சயம் பெறுவோம்” என அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.

Previous articleதனியார் மருத்துவமனையில் தீ விபத்து!! உடல் கருகி 7 பேர் உயிரிழந்த சோகம்!!
Next articleரீல்ஸ் மோகத்தால்  மனைவிக்கு நேர்ந்த சோகம்!! குழந்தைகள் கண் முன்னே கணவன் வெறிச்செயல்!!