சட்டசபையில் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Photo of author

By Sakthi

சட்டசபையில் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Sakthi

தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் சென்ற ஒரு வார காலமாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகின்றது. இந்த நிலையில், நேற்றைய தினம் வேளாண்மை கால்நடை மீன்வளம் மற்றும் பால் வளத் துறையில் பராமரிப்பு மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அந்த சமயத்தில் திருவாடானை தகுதி சட்டசபை உறுப்பினர் கரு மாணிக்கம் ஆர்எஸ் மங்கலம் ஏரிகளில் இருக்கின்ற கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அவருடைய கோரிக்கைக்கு பதில் தந்து உரையாற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுப்பினராக கரூ மாணிக்கம் உரையாற்றும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் இவருடைய பாட்டனார் மற்றும் தந்தை தற்சமயம் இவர் என்று மூன்று தலைமுறைகளை நான் கண்டிருக்கிறேன் என்று கூறினார்.

கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பதை தொடக்கத்தில் இருந்து நான் வலியுறுத்தி வருகிறேன். இருந்தாலும் பசுமை காடுகள் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு காலத்தில் ஏரிகளில் கருவேல மரங்களை நட்டு விட்டார்கள். அந்த சமயத்திலேயே அவனை நான் எதிர்த்தேன் ஆனாலும் மரங்கள் நடப்பட்டு விட்டதால் எதுவும் செய்ய இயலவில்லை என தெரிவித்தார் துரைமுருகன்.

ஆனால் தற்சமயம் தமிழகம் முழுவதும் கருவேல மரங்கள் மிக அதிகமாக உள்ளனர். இந்த கருவேல மரங்கள் மூலமாக நீர் வளம் அதிகமாக உறிஞ்சப்படுவதால் விளை நிலங்கள் தரிசு நிலமாக ஆகிவிடுவதுடன் முட்களும் பரவி வருகின்றது. இதன் காரணமாக, விவசாயம் செய்ய இயலாத ஒரு சூழல் உண்டாகிறது என்று கூறியிருக்கின்றார்.

சட்டசபையில் உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று ஆர்எஸ் மங்கலத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய கருவேல மரங்களை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இது ஒரு திட்டமாகவே செயல்படுத்தப்படும் என்று கூறியதோடு சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் மரங்களை வெட்டி அதன் வருவாயை எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை இடத்தை காலி செய்து கொடுத்தால் மட்டும் போதும் என்று உரையை முடித்துக்கொண்டார் துரைமுருகன்.