உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி!
கடந்த 2012 ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனி காவலருக்கு ஒத்துக்கியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
2012 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையினரின் இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஐ. பெரியசாமியை விடுவித்தது.
ஆனால் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாமாக முன்வந்து மறுஆய்வு செய்த சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு அளித்துள்ளார்.