பிகில் படத்துக்கு தடை வருமா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

Photo of author

By Parthipan K

பிகில் படத்துக்கு தடை வருமா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: நடிகர் விஜயின் பிகில் பட வெளியீட்டுக்கு ஆளும் அதிமுக அரசு தடை போடுகிறதா என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய் கூட்டணியில் அடுத்து வெளியாக இருக்கும் படம் பிகில். விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் என்று நம்பப்படுகிறது. அதற்கான வேலைகளிலும் தயாரிப்பு நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. படத்தை காண விஜய் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

பிகில் படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது. படத்தில் நயன்தாரா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

அண்மையில் ரீலிசான படப்பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்காக நடத்தப்பட்ட இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு தமிழக அமைச்சர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது, நடிகர் விஜய்யின் பிகில் பட வெளியீட்டுக்கு அதிமுக அரசு தடை போடுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது பேசிய ஜெயக்குமார், யார்வேண்டுமென்றாலும் நடிக்கலாம் . படத்தை வெளியிடலாம். இசைவெளியீட்டு விழாவில் அவர் ஜனநாயக அடிப்படையில் பேசினார். அதனை நாங்கள் ஜனநாயக முறையில் சந்தித்தோம் என்றார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.