மறுபிறவி எடுத்தார் அமைச்சர் காமராஜ்! பெரு மகிழ்ச்சியில் அதிமுகவினர்!

Photo of author

By Sakthi

மறுபிறவி எடுத்தார் அமைச்சர் காமராஜ்! பெரு மகிழ்ச்சியில் அதிமுகவினர்!

Sakthi

Updated on:

தமிழகத்தின் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்களின் உடல்நிலை தொடர்பாக சென்னையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அந்த சமயத்தில் உரையாற்றிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காமராஜ் கொரோனா தோற்றால் பாதிப்படைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் குழுவின் தீவிர முயற்சி காரணமாக அவர் தற்சமயம் உடல் நலம் பெற்று இருக்கிறார். 95% நுரையீரல் பாதிப்புடன் இருந்த அமைச்சர் காமராஜ் தற்சமயம் மறுபிறவி எடுத்து இருக்கிறார். இன்றோ அல்லது நாளை காலையோ அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு மிகப் பெரிய சவாலான இந்த சிகிச்சையை எங்கள் அனைவருக்கும் ஒரு அனுபவம். இந்த அளவிற்கு பாதிப்பு உடலில் இருந்த ஒருவரை மீட்டெடுக்க இயலும் என்ற நம்பிக்கை தற்சமயம் எங்களுக்கு வந்திருக்கிறது. முழுமையான உடல் நலத்துடன் அமைச்சர் காமராஜ் இருந்து வருகிறார். இன்னும் சுமார் மூன்று வாரங்களில் அவர் முழுமையாக நலம் பெற்று தன்னுடைய மக்கள் நலப்பணியில் தொடர்வார் என்று தெரிவித்திருக்கிறார்.a அதோடு மக்கள் பிரதிநிதி என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அமைச்சர் காமராஜ் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் என்றும் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.