மிஸ்டர் டிடிவி ஷட் அப் யுவர் மவுத்! கொந்தளித்த ஜெயக்குமார்!

0
107

நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களும் உரையாற்றிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி பாராளுமன்ற தேர்தல், மற்றும் சட்டசபை தேர்தலில் யாரை எதிர்த்து நின்றார் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய சின்னம் அம்மா அவர்களுடைய சின்னம் அந்த இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து தானே போட்டியிட்டார்கள் என்று தெரிவித்து இருக்கிறார்.

எம்ஜிஆர் கண்டெடுத்த வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையையும், அதிமுகவையும், எதிர்ப்பு போட்டியிட்டு நம்முடைய கட்சியை உடைக்க முயற்சி செய்திருக்கிறார்கள் அவர்கள் எவ்வாறு நம் கட்சியை பற்றி கருத்து சொல்ல இயலும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு அதிமுகவைச் சேர்ந்த உண்மையான தொண்டர்களும், சரி தமிழக மக்களும் சரி, அவர்களுடைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார். தமிழக மக்களை பொறுத்தவரையில் இன்று தமிழகத்தில் அரசியல் ரீதியாக என்ன நடக்கிறது என்பதை அனைவரும் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆகவே அதிமுகவை உரிமை கொண்டாடுவதற்கு சசிகலா தரப்பிற்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.

5 வருடம் மட்டும் உறுப்பினாக இருந்துவிட்டு சென்றுவிடாமல் தொடர்ச்சியாக உறுப்பினராக இருக்கவேண்டும் அப்படி பார்த்தால் டிடிவி தினகரன் கட்சியில் உறுப்பினரே இல்லை சசிகலாவும் கட்சியில் உறுப்பினர் கிடையாது அப்படி இருக்கும் பொழுது அவர்கள் இருவரும் எவ்வாறு பொதுச்செயலாளர் என்று தெரிவிக்க இயலும் இந்த கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்கள் இதனை எவ்வாறு உரிமை கொண்டாட இயலும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நினைவிடம் கட்டப்பட வேண்டும் என்பதே உலகத்தில் இருக்கக்கூடிய தமிழ்மக்கள் எல்லோரிடமும் இருந்து வரும் ஒரு உணர்வாக இருக்கிறது. அந்த உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் எம்ஜிஆரின் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த நினைவகத்தை திறந்து வைத்திருக்கிறார்.. அதனை திறந்து வைத்த பிறகு முன்னாள் முதல்வர் அம்மாவின் நினைவிடத்தில் பணிகள் இரண்டாவது முறையாக நடந்து வருகிறது. ஆகவே நினைவிடம் மூடப்பட்டு இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.