சுகாதாரத் துறை அமைச்சரின் திடீர் டெல்லி பயணம்!

0
69

நாடுமுழுவதும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில், தமிழகத்தில் மெல்ல, மெல்ல, நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது அதற்கு தமிழக அரசின் சீரிய நடவடிக்கையே காரணம் என்று சொல்லப்படுகிறது.

நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக ஏற்பட்டதை அடுத்து பல கட்டுப்பாடுகள் மாநிலத்தில் விதிக்கப்பட்டது இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியும் மிக விரைவாக நடைபெற்று வருகிறது.

அத்துடன் மாநிலம் முழுவதும் வாரம்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் களை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு கொண்டே வருகின்றன. இதனால் மாநிலத்தில் தடுப்பூசியின் இருப்பு குறைந்து இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டுச் சென்றிருக்கிறார். முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து மருத்துவ தேவைகள் மற்றும் மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்துவதற்கான நிதி ஆதாரம், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த இருக்கிறோம். தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது என கூறியிருக்கிறார்.

அத்தோடு கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணை செலுத்தியவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த போதுமான தடுப்பூசிகள் இதுவரையில் வரவில்லை இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த 10 லட்சம் தடுப்பூசிகள் தரவேண்டும். தமிழ்நாட்டில் 19 மாவட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட இருக்கிறது இதற்கு 950 கோடி வழங்க மத்திய அரசிடம் அறிவுறுத்தப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.