திடீரென டெல்லி புறப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர்! கோரிக்கையை பரிசீலிக்கும் டெல்லி?

Photo of author

By Sakthi

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றிருக்கிறார். நேற்றையதினம் சட்டசபையில் மருத்துவத் துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய நிலையில் இன்று அமைச்சர் சுப்பிரமணியம் டெல்லி சென்றிருக்கிறார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன்.

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து 11 மருத்துவ கல்லூரிகளுக்கு இந்த வருடமே மாணவர் சேர்க்கை எய்ம்ஸ் மருத்துவமனை பொது மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி உதவி உள்ளிட்ட 10க்கும் அதிகமான திட்டங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை இன்று பிற்பகல் சந்திக்க இருக்கின்றோம். அதற்கான வேலையாக தற்சமயம் டெல்லி புறப்படுகிறோம் என தெரிவித்திருக்கிறார் அமைச்சர்.

அத்துடன் நோய்தொற்று தடுப்பூசி குறித்து நேற்று சட்டசபையில் விளக்கம் கொடுத்த சுப்பிரமணியன் தமிழ்நாட்டிற்கு மேலும் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் வேண்டும் எனவும் இந்த பயணத்தின் முக்கிய திட்டமாக இதனை வைத்திருக்கிறார் எனவும் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கோயமுத்தூருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருக்கின்ற நிலையில், முன்னரே அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரையில் போதிய நிதி ஒதுக்கப்படாமல் அந்தத் திட்டம் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருக்கிறது.

அதோடு முன்னரே தடுப்பூசி உற்பத்திக்காக செங்கல்பட்டு, குன்னூரில் இருக்கும் தொழில் கூடங்களை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருக்கிறது. அது குறித்தும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இந்த பயணத்தின் போது மத்திய அரசிடம் வலியுறுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது.