மாணவிக்கு ஏற்பட்ட நோய் தொற்று! பீதியில் பெற்றோர்கள்!

0
62

நாமக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்தார்கள்.. பள்ளிகளின் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக மாவட்டம் தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கின்ற மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாணவிக்கு பரிசு சோதனை மேற்கொண்டதில் அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது தற்சமயம் மாணவி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இருக்கிறார். பள்ளிகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி தீவரமாக நடந்து வருகிறது.

இதனையடுத்து பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முயற்சி எடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னரே கடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கின்றது. தற்சமயம் மாணவி ஒருவருக்கு நோய் தொற்றுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு தினங்களே ஆன நிலையில். ஆசிரியை மற்றும் மாணவிக்கு நடைபெற்ற உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது..

இதனை சாதாரணமாக, கடந்து செல்ல இயலாது மாணவர்கள் தனிப்பட்டவர்கள் அல்ல முதியவர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் இருக்கக்கூடிய குடும்பத்தில் இருந்துதான் அவர்களும் வருகை தருகிறார்கள். பள்ளியில் கூட்டமாக இருக்கிறார்கள் பள்ளி முடிந்த பின்னர் மறுபடியும் வீட்டிற்கு செல்லும் சமயத்தில் இவர் மூலம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நோய் தொற்று பரவுவத்தற்கான வாய்ப்பு இருக்கிறது.. ஏனென்றால் வீட்டில் முகக் கவசம் அணிவது இல்லை மற்றும் சமூக இடைவெளி நாம் எல்லோரும் கடைபிடிப்பது கிடையாது. இருந்தாலும் இந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது என்று பெற்றோர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.