தேமுதிகவின் கூட்டணி விலகலுக்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? கேட்டு அதிர்ந்து போன முக்கிய கட்சி!

0
118

கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, சமீபத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதற்கு காரணம் என்னவென்று கேட்டால் தாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தரப்பு தர மறுத்து விட்டது என்று தேமுதிக சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் பாண்டியராஜன் இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றினார். அவர் தெரிவித்ததாவது தேமுதிக எங்களுடைய கூட்டணியில் இருந்து விலகி இருப்பதால் தற்போது நாங்கள் போட்டியிடும் தொகுதி விட இன்னும் அதிக தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அதே வேளையில், அந்தக் கட்சியின் வாக்கு வங்கி, தமிழகம் முழுவதிலும் இருக்கக்கூடிய அந்த கட்சிக்கான ஆதரவு, மக்கள் செல்வாக்கு, போன்றவற்றை கருத்தில் வைத்து தான் அந்த கட்சிக்கு நாங்கள் சீட்டு கொடுத்தோம். இருந்தாலும் இது எதையுமே சரிவர கவனிக்காமல் மிக அதிக தொகுதிகளை அந்த கட்சி எதிர்பார்த்தது. ஆகவேதான் அவர்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று விட்டார்கள் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக அதிமுக கூட்டணியில் இருந்து விலகிச் சென்ற தேமுதிக டிடிவி தினகரனுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிலும் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், தேமுதிக தனித்து நிற்பதாக ஒரு தகவல் கிடைத்தது.ஒருவேளை தேமுதிக தனித்து நின்றால் அந்த கட்சியின் செல்வாக்குடன் ஒப்பிட்டு பார்த்தால் நிச்சயமாக அந்த கட்சி இந்தத் தேர்தலுடன் காணாமல் போய்விடும் என்றுதான் சொல்கிறார்கள்.

அப்படி இருக்கையில், நிச்சயமாக அவ்வாறு ஒரு முடிவை அந்த கட்சி மேற்கொள்வது கடினம் அதிலும் குறிப்பாக விருதாச்சலம் தொகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றார். அந்த தொகுதியை பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது தேமுதிகவை வருத்தமடையச் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.அதோடு கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதை தவிர்த்து விருதாச்சலம் தொகுதியை பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கியதுதான் இந்தக் கூட்டணி விலகலுக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleபாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெளியானதும் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல்!
Next articleஅனல் பறக்கும் கோவில்பட்டி தொகுதி! டி டி விக்கு மறைமுக ஆதரவு கொடுத்த முக்கிய கட்சி!