பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெளியானதும் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல்!

0
62

எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே பாட்டாளி மக்கள் கட்சி முதல் கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கின்றது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 10 வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 23 தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டு விட்ட சூழ்நிலையில், மீதம் இருக்கின்ற நான்கு தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேட்டூர் தொகுதியில் சதாசிவம் அவர்களும், பூந்தமல்லி தொகுதியில் ராஜமன்னார் அவர்களும், சங்கராபுரத்தில் ராஜா அவர்களும், வந்தவாசி தொகுதியில் ரவிஷங்கர் அவர்களும், போட்டியிட இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே அன்றைய தினம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர்கள் அனைவரும் இன்றைய தினம் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. வேட்புமனுத்தாக்களை அடுத்து அவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட இருப்பதாக தெரிகிறது. ஆகவே அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழக அரசியல் களத்தில் ஒரு விறுவிறுப்பான செயல்பாடுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு விருதாச்சலம், ஜெயங்கொண்டம், ஆகிய தொகுதிகளை அதிமுக கூட்டணி ஒதுக்கியதற்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அதேபோல வன்னியர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் வைத்தி அவர்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி இருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு முக்கிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.