வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

Photo of author

By Anand

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

Anand

K. Ponmudy

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2011 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கை வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா, அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை கடந்த மாதம் 19 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி முன்பாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோர் ஆஜராகினர். இதனையடுத்து இந்த வழக்கை வரும் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி வசந்தலீலாஉத்தரவிட்டுள்ளார்.