சேலத்தின் முக்கிய நிர்வாகிக்கு அமைச்சர் பதவி.. ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

Photo of author

By Rupa

DMK: சேலம் மாவட்டம் திமுக நிர்வாகியான ராஜேந்திரனுக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தற்போது வரை இரண்டு முறை அமைச்சரவையில் மாற்றம் வந்துவிட்டது. தற்பொழுது மூன்றாவது முறையாக மீண்டும் மாற்றம் வரும் என பெருமளவில் பேசப்பட்டது. குறிப்பாக தனது மகனை துணை முதல்வர் பதவியில் அரியணை ஏற்ற வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக ஸ்டாலின் வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி வேறு சிலரின் இலக்காக்கல் மாற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செந்தில் பாலாஜி வழக்கு தற்பொழுது வரை முடிவில்லாத நிலையில் இருப்பதால் அமைச்சரவை மாற்றத்தை காலம் தாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் அமைச்சரவையில் மாற்றம் வரும் பொழுது கட்டாயம் சேலத்திற்கு முக்கிய பங்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் என்பது அதிமுகவின் கோட்டை என்றே சொல்லலாம்.

எடப்பாடி சொந்த ஊர் என்பதால் திமுகவின் கொடியானது பெருமளவு எட்டுவது சிரமம். இருப்பினும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது முழு மூச்சு கொண்டு எதிர்த்து ஒரு தொகுதியில் மட்டும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி மற்றும் மக்களவை தேர்தல் என இரண்டிலும் திமுக தான் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. மேற்கொண்டு இதனை ஊக்குவிக்கும் வகையில் கட்டாயம் சேலம் மாவட்ட நிர்வாகிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்பொழுது சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக கே என் நேரு உள்ளார். ஆனால் இவர் அவ்வப்போது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருவதால் தங்களின் குறைகளை கூற முடியவில்லை என சேலம் திமுக நிர்வாகிகள் தங்களது ஆதங்கத்தை அவ்வபோது தெரிவித்து வருகின்றனர். இது தலைமையகத்திற்கு வரை சென்றுள்ளதால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் பொழுது கட்டாயம் எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு முக்கிய பதவி ஒதுக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான கோரிக்கைகளும் வலுத்துள்ளது என்றே சொல்லலாம். தற்போது எடுக்கப் போகும் முடிவு தான் அடுத்த சட்டமன்ற தேர்தலில் இவர்களின் வீரியத்தை அதிகரிக்கும் வகையிலும் முனைப்போடும் செயல்பட வைக்கும் என சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.