முக்கிய அமைச்சருக்கு எதிராக நிறுத்தப்பட்ட திமுக மூத்த நிர்வாகி! அதிர்ச்சியில் அதிமுகவினர்!

0
98

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வரவிருக்கின்றது. அதனைத் தொடர்ந்து அதிமுக திமுக என்ற இரு கட்சிகளில் இருக்கும் முக்கிய புள்ளிகள் அனைத்தும் தங்கள் பகுதியில் மிக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த விதத்தில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவருடைய தொகுதியான காட்பாடி தொகுதியில் பிரச்சாரம் செய்தார். உதயநிதி ஸ்டாலின் தனக்கு ஒதுக்கப்பட்ட சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு மு க ஸ்டாலின் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.

அதிமுகவைப் பொறுத்தவரையில் அந்தக் கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் வேட்புமனு தாக்கல் ஆரம்பமான முதல் நாளே தன்னுடைய வேட்புமனுத்தாக்கல் முடித்துக்கொண்ட ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் முதல் நாளே வேட்புமனுத்தாக்கலை முடித்துக் கொண்டதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அதோடு கடந்த திங்கள்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போன்ற பல முக்கிய தலைவர்கள் தங்களுடைய வேட்புமனுத்தாக்கல் முடித்துக் கொண்டார்கள்.இதேபோன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் போன்றவர்களும் தங்களுடைய வேட்புமனுத் தாக்கலை செய்துவிட்டார்கள்.

இன்றைய நிலையில், மதுரை மாவட்டம் செல்லூரை சொந்த ஊராகக் கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு அந்தப் பகுதியில் போட்டியிட இருக்கின்றார். இந்த நிலையில், திமுக சார்பாக மதுரை தெற்கு தொகுதியில் சின்னம்மாள் என்ற மூத்த திமுகவின் நிர்வாகி சின்னம்மாள் களமிறக்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இவர் அமைச்சர் செல்லூர் ராஜு எதிராக களம் காண இருக்கிறார் என்ற காரணத்தால், அவருடைய பெயரை அவ்வப்போது தெரிவிக்க வேண்டிய ஒரு நிலை அதிமுகவினருக்கு ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் பிரச்சாரத்தின் போது அவருடைய பெயரை குறிப்பிட்டால் அது சசிகலாவை குறிப்பிட்டு பேசுவதை போல ஆகி விடும் அதோடு அவருக்கு எதிராக நாம் பேசுவது போல இருக்கும் என்ற காரணத்தால், செல்லூர் ராஜு அதிமுகவினரை அந்த பெயரை உச்சரிக்க தேவையில்லை என்று கட்டளையிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.