விஜய் படத்திற்கு வந்த வில்லங்கம்… சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கும் சன் பிக்சர்ஸ்…!

0
103

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியானது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக படம் பட்டையக் கிளப்பியது. கொரோனா நேரத்தில் மக்களை தியேட்டருக்கு வரவழைக்க உதவியதால் விஜய்க்கு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர். மாஸ்டர் கொண்டாட்டங்களை எல்லாம் முடித்துக் கொண்ட விஜய் தற்போது அடுத்த படத்தில் பிசியாக களமிறங்கியுள்ளார்.

சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன் அடுத்து தளபதி விஜய்யை இயக்க உள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 65’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ‘தளபதி 65’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘புட்ட பொம்மா’ புகழ் பூஜா ஹெக்டே தான் ஹீரோயின். இந்த படத்தில் நடிக்க பூஜாவுக்கு ரூ. 3.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Vijay

படத்தின் முதல் ஷெட்டியூல் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க உள்ளது. இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் சென்னையில் பூஜையை முடித்த கையோடு ரஷ்யா பறக்க உள்ளனர். இதற்காக நெல்சன் சமீபத்தில் ரஷ்யாவில் லொக்கேஷன் பார்க்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. ஏப்ரல் மாதத்தில் தான் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தளபதி 65 படத்திற்கு மற்றொரு சிக்கல் வந்துள்ளது.

அதாவது பிரபல டெக்னீஷியனின் திறமையால் கவரப்பட்டு சன்பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்திற்காக அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. படக்குழு ரஷ்யா கிளம்ப திட்டமிட்டு வரும் நிலையில், அந்த டெக்னீஷியன் படத்திற்கு தேவையான எந்த வேலையிலும் கவனம் செலுத்தாமல் பகலிலேயே குடியும் கும்மாளமுமாக வலம் வருகிறாராம். தண்ணி வண்டி என்றாலும் தனது துறையில் திறமையானவராக இருந்ததால், அவரை தளபதி 65 படத்தில் ஒப்பந்தம் செய்த படக்குழுவிற்கு இப்போது விழி பிதுங்குகிறதாம். காரணம் பார்ட்டி காலையிலேயே சரக்கை போட்டுவிட்டு தான் வேலையை ஆரம்பிப்பார் என்பதால், வெளிநாட்டு படப்பிடிப்பில் வில்லங்கம் வந்துவிடும் என அஞ்சுகின்றனராம். எனவே ரஷ்யா பறக்கும் முன்பு அந்த பிரபல டெக்னீஷியனை கழட்டிவிட சன்பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.