ரஜினியின் பேட்டிக்கு இதுதான் காரணம்! அமைச்சர் செல்லூர் ராஜு கண்டுபிடித்த உண்மை

ரஜினியின் பேட்டிக்கு இதுதான் காரணம்! அமைச்சர் செல்லூர் ராஜு கண்டுபிடித்த உண்மை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டு முறை செய்தியாளர்களை சந்தித்து ஊடகங்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினி குறித்த செய்தி என்றால் அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுக்கும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று அவர் அளித்த 2 பேட்டிகளும் நேற்று முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது


குறிப்பாக அவர் கூறிய ’தமிழகத்தில் இன்னும் ஆளுமையான தலைவருக்கான வெற்றிடம் உள்ளது’ என்பது அனைத்து அரசியல் தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அவர்களும், முதல்வர் பதவிக்காக காத்திருக்கும் முக ஸ்டாலின் அவர்களும் ரஜினியின் இந்த பேட்டியால் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த பேட்டி குறித்து தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கூறும்போது ’ரஜினிகாந்த் தனது திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் இம்மாதிரி பேட்டி கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். அவர் நடித்த ’தர்பார்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. அதே போல் அவருடைய இன்னொரு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 படங்களுக்காகதான் அவர் இவ்வாறு பேசியிருக்கலாம். மற்றபடி அவர் கூறுவது போல் தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் இல்லை என்று கூறினார்

முன்னதாக நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ரஜினிகாந்த் அவர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ’அரசியல் என்பது தொழில் அல்ல என்றும், பல ஆண்டுகாலம் வேறொரு தொழிலில் இருந்துவிட்டு பின்னர் அந்த தொழிலிலிருந்து அரசியலுக்கு வரலாம் என்று சிலர் கனவு காண்கின்றனர். அந்த கனவு பலிக்காது என்று தெரிவித்திருந்தார்

Leave a Comment