அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா.. 2 வருக்கு சிறை செல்ல நீதிமன்றம் பரபர உத்தரவு!!

Photo of author

By Rupa

அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா.. 2 வருக்கு சிறை செல்ல நீதிமன்றம் பரபர உத்தரவு!!

Rupa

Minister Senthil Balaji resigns.. Court orders 2 people to go to jail!!

DMK: அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வந்த நிலையில் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றுள்ளார். இதனால் பாதிப்படைந்தவர்கள் இவருக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். இவர் அதிமுக – விலிருந்து திமுக பக்கம் சென்றதும் இந்த வழக்கானது தீவிரமடைய ஆரம்பித்தது. அதில் அமலாக்கத்துறை இவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.

செந்தில் பாலாஜியை அடுத்து, அவரது சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் பி. சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது அமலாக்கத்துறை (ED) வழக்குப்பதிவு செய்தது. இவர்கள் மீதும்  சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் போடப்பட்டது. மேற்கொண்டு ஓராண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த செந்தில் பாலாஜி வெளியே வந்தவுடன், மீண்டும் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கியது. இவர் அமைச்சராக இருப்பதால் சாட்சியங்களை கலைக்க கூடலாம் என எண்ணி இவருக்கு பதவியா ?  ஜாமீனா ?  என்ற ஆப்ஷனை நீதிமன்றம் கேட்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில் நேற்று இந்த வழக்கு அமர்வுக்கு வந்த நிலையில் , இதில் சம்மந்தப்பட்ட ஜெயராஜ் குமார் மற்றும் பழனி ஆகிய இருவரும், ஜாமீனுக்கான ₹2 லட்சம் உத்தரவாத தொகையை செலுத்தாததால், சென்னை உயர்நீதிமன்றம் அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், அமலாக்கத்துறை சுமார் 5,000 பக்க ஆவணங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த ஆவணங்களை காகித வடிவில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.