மீன் வளப்பணிகள் குறித்து அமைச்சர் திடீர் ஆய்வு! தேனியில் தொடர் பரபரப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரையின்படி மாண்புமிகு மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் . அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று தேனி மாவட்டம், வைகை அணையில் மீன் வளப்பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ,முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ், வைகை அணை உதவி இயக்குனர் பஞ்சராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் அவர்கள் (கம்பம்),
ஆ.மகாராஜன் அவர்கள் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் அவர்கள் பெரியகுளம்), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன் அவர்கள், . எல்.மூக்கையா ,தேனி மாவட்ட திமுக மாணவர் அணி செயலாளர் எஸ் பி டி ஸ்டீபன் , மற்றும் திமுக கழக முன்னோடிகள் உட்பட பலர் உள்ளனர்.