ஸ்டிக்கர் ஒட்ட 3.50 கோடி ஒதுக்கீடு சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

0
131

ஸ்டிக்கர் ஒட்ட 3.50 கோடி ஒதுக்கீடு சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

நேற்றைய தினம் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான விவாதம் நடைபெற்றது‌. அப்போது அமைச்சர் தங்கமணி அவர்கள் துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை அறிக்கையாக வெளியிட்டார்.

அதில் மதுவுக்கு எதிராக அரசாங்கம் மது பாட்டில்களில் குடி குடியை கொடுக்கும் என்றும் மது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் இதுநாள் வரையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வந்தது இனி அதில் குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர் என்ற வாசகமும் சேர்த்து அச்சடித்து மக்களிடையே மதுவுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக அரசு 3.50 கோடி ரூபாய் நிதியை கூடுதலாக ஒதிக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் டாஸ்மாக் நிறுவனத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வாக ரூ.500 வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாகவும், இதனால் ஆண்டொன்றுக்கு அரசுக்கு கூடுதலாக 15.42 கோடி கூடுதல் செலவாவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனையடுத்து கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் அவர்கள் அமைச்சரின் இந்த அறிவிப்பு முற்றிலும் தொழிலாளர்களுக்கு எதிரானது. ஊழியர்கள் தொகுப்பூதியம் மட்டுமே பெருகின்றர் அவர்களுக்கு இந்த குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஏமாற்றத்தை தருவதாகவே அமைகிறது.

மேலும் டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்குதல் பணி நிரந்தரம் செய்தல், கல்வித்தகுதிப்பு ஏற்ப பணி உயர்வு வழங்குதல் உள்ள எந்த கோரிக்கையையும் அரசு பரிசீலிக்காதது மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இதுகுறித்து அனைத்து தொழிற்சங்கங்களும் விரைவில் கூடி கோரிக்கைகளை வலியுருத்தி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

Previous articleஅமேரிக்க அதிபர் குடும்பத்துக்கு கொரோனா தொற்று : பரிசோதனை செய்து கொள்ள போகிறார் டிரம்ப்!
Next articleகொரோனா வைரஸ் பரவலை தடுக்க கைலாசா வாசிகளுக்கு நித்தியானந்தா ஆச்சரிய தகவல் : இதனை பின்பற்றுமாறு உலக மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்!