கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கைலாசா வாசிகளுக்கு நித்தியானந்தா ஆச்சரிய தகவல் : இதனை பின்பற்றுமாறு உலக மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்!

0
72

சீனாவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்று இத்தாலி தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் இதுவரை 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி 1 லட்சத்து 35 ஆயிரம் பேரை நோய் தாக்கியுள்ளது. இந்த நோயை குணப்படுத்த பல நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்யானந்தா கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆச்சரியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் இந்த நோய் தொற்று கைலாசா வாசிகளுக்கு ஏற்படாமல் இருக்க அனைவரும் சமயபுரம் மகாமாரியம்மனுக்கு ‘பச்சை பட்டினி’ விரதம் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் மகாமாரியம்மனுக்கு பச்சை பட்டினி விரதம் இருந்தால் அனைவரையும் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் நித்தியானந்தாவை நக்கலடித்து வருகின்றனர்.

author avatar
Parthipan K