அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி பேட்டி!!

0
98

அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும்! உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி பேட்டி!!

 

விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ் மணி அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.

 

இயக்குநனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் உதய்நிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர்களின் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி மாமன்னன் திரைப்படம் வெளியானது. ஏ.ஆர்அ ரஹ்மான் மாமன்னன் திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். நடிகர் தனுஷ் அவர்கள் மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு நல்லவிதமாக மாமன்னன் படத்தை பற்றி கருத்து தெரிவித்தார்.

 

இந்நிலையில் சட்ட அமைச்சர் ரகுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும். தான் நடிக்கும் கடைசி படம் மாமன்னன் என்ற முடிவை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று புதுக்கோட்டையில் பேட்டியளித்தார்.

 

சட்ட அமைச்சர் ரகுபதி அவர்கள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ் மணி அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டதற்கு மாறாக அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் நடந்து கொண்டால் அவர் பதவி விலக வேண்டும் எனறு கூறியுள்ளார்.

 

அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டவர்கள் 24 மணி நேரமும் மக்களின்.சேவைக்காக காத்திருக்க வேண்டும். அமைச்சராகவும் இருந்து கொண்டு வேறு தொழிலில் ஈடுபட்டு லாபம் ஈட்டுவதாக இருந்தால் அவர்கள் அனைவரும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும்.

 

இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி அவர்கள் “கலக்டர், தாசில்தார் போலத்தான் அமைச்சர்களும். கலக்டர் தாசில்தார் அனைவரும் அரசிடம் இருந்து சம்பளம் வாங்குபவர்கள். அதே போலத்தான் அமைச்சர்களும் அரசிடம் இருந்து சம்பளம் வாங்கும் ஊழியர்கள்.

 

கலக்டர்கள், தாசில்தார்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிமுறைகள் இருக்கின்றதோ அதே கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் அமைச்சர்களுக்கும் பொருந்தும். அமைச்சர்களை பொது ஊழியர்கள் என்று கூறலாம். ஆனால் அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து அமைச்சர்கள் விலகிச் செல்ல முடியாது.

 

அரசு ஊழியர்கள் 24 மணிநேரமும் மக்கள் பணிக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் போலவே அமைச்சர்களும் 24 மணி நேரமும் மக்களின் தேவைக்காக கத்திருக்க வேணடும். அமைச்சர்கள் வேறு தொழில் செய்து சம்பாதிக்க நினைத்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு தொழிலை செய்து சம்பாதிக்கலாம்.

 

அமைச்சர்கள் பதவியேற்கும் பொழுது முழு நேரமும் மக்களுக்காக செயல்படுவோம் என்று உறுதி மொழி எடுத்த பின்னர் அமைச்சராக பதவி ஏற்கின்றனர். ஆனால் பதவியேற்ற பிறகு வேறு தொழில் செய்து லாபம் ஈட்டுவது உறுதிமொழிக்கு எதிராக நடப்பது போலாகிவிடும்.

 

இதன் காரணமாக நடிப்பு அல்லது அமைச்சர் பதவி இரண்டில் ஒன்றை தான் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் தெளிவாக இருக்கிறார். ஆனால் நடிகராக உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் ரசிகர் மன்ற தலைவராக மாறி இருக்கும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளார்.

 

நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களும், நடிகர் ராமாராவ் அவர்களும் முதலமைச்சராக பதவியேற்ற பொழுது அவர்கள் திரைப்படங்களில் நடிக்கக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய அரசின் உத்தரவை ஏற்றுக் கொண்ட எம்.ஜி.ஆர் அவர்களும் ராமாராவ் அவர்களும் திரைப்படங்களில் நடிக்கிமல் முதலமைச்சராக மக்களுக்கு சேவை செய்து வந்தனர். இந்த கட்டுப்பாடு அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கும் பொருந்தும். இது சட்டமா இப்நடி சட்டம் இருக்கிறதா என்று கேட்டால் இல்லல.

 

எடுத்துக்காட்டாக நாம் துணி உடுத்தும் பொழுது உள்ளாடை அணிந்த பிறகு அதன் மேல்தான் வேட்டி அல்லது மற்ற உடுப்புகளை போடுகிறோம். இது சட்டம் இல்லை. ஆனால் வேட்டி மற்ற துணிகளை முதலில் அணிந்து கொண்டு பின்னர் அதன் மேல் உள்ளாடை அணிந்து கொள்ளலாம் என்று கூறும் நபரை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்வோமோ அது போலத்தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

அமைச்சராக இருக்கும் உதய்நிதி ஸ்டாலின் மட்டும் அல்ல. இனி எந்தவொரு நடிகரும் அமைச்சராக பதவியேற்றாலும் புகை பிடிக்கக் கூடாது என்று கூறும் விளம்பரப் படத்தில் நடிக்கலாம். ஆனால் அதிலும் பணம் வாங்காமல் நடிக்க வேண்டும். அதில் பணம் வாங்கி நடித்தால் அதுவும் தவறுதான்” என்று  அவர்.கூறியுள்ளார்.