பிரெஞ்சு மொழியில் பயிலும் அமைச்சரின் மகன்!! கொந்தளித்த மக்கள்!!

Photo of author

By Gayathri

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் அவர்களின் இரண்டாவது மகன் தமிழினை தேர்வு செய்து படிக்காமல் பிரெஞ்சு மொழியினை தேர்வு செய்து படிக்கிறார் என்று கூறப்பட்ட வீடியோவானது மக்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் அனைவரும் இது குறித்து பல கேள்விகள் கேட்டுள்ளனர்.

நேற்று இரவு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துகொண்டிருக்கிறார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொழுது இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்த பதில் :-

எனது மகன் 6 ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தைத்தான் படித்தார். 7ஆம் வகுப்பில் புதிதாக ஒரு மொழியைக் கற்க முயற்சி செய்வதாகப் பிரெஞ்சு மொழியைத் தேர்வு செய்து படித்தார்.

அது கடினமாக இருப்பதாகத் தற்போது தமிழ் மொழிக்கு மாறிவிட்டார். சத்யா மேடம் தான் அவரது ஆசிரியர். எதனால் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. திடீரென மைக் நீட்டிக் கேட்டதால் என்ன சொல்வதென்று தெரியாமல் சொல்லிவிட்டான். கவலையே படாதீர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகன் தமிழ் மொழியில்தான் படிக்கிறார் என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்.

மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பில் புதிய கல்வி கொள்கை குறித்து கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், “தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையைத் தொடர்ந்து எதிர்த்துத்தான் வருகிறோம்.
மாநில கல்விக் கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தித் தான் வருகிறோம்” என்று கூறியுள்ளார்.