தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களுக்கு உள்துறை அமைச்சகம் ஆனது ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. இந்த வாய்ப்பிரிவில் crpf வீரர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் என்று எட்டு முதல் 11 பேர் தலைவர் விஜய் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என்றும் இந்த Y பிரிவு பாதுகாப்பானது தமிழக வெற்றிக்கழக தலைவருக்கு தமிழகத்தில் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவ்வாறு இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் விஜய் அவர்கள் மீது மொட்டை அடிக்கப்படும் என சமீபமாக சமூக வலைதளங்களில் உரையாடல்கள் பரவி வருவதால் உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், அரசியலில் இது போன்ற சுற்றுப்பயணம் மேற்கொள்ளக்கூடிய பிரமுகர்களுக்கு அதாவது முக்கிய பிரமுகர்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து இது போன்ற பாதுகாப்புகளை வழங்குவது வழக்கத்தில் உள்ள ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.
அவ்வாறாகத்தான் தற்பொழுது விஜய் அவர்களுக்கு Y பிரிவு பாதுகாப்பானது வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் பொதுவாக முக்கிய பிரமுகர்களுக்கு என்று X , Y , Z , Z+ போன்ற நான்கு வகைகளில் மத்திய அரசு சார்பிலும் மாநில அரசு சார்பிலும் பாதுகாப்பானது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கு துபாய் நிறுவனத்தில் இருந்து பவுன்சர்கள் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து உள்துறை அமைச்சகத்தின் மூலமாக தற்பொழுது தலைவர் விஜய் அவர்களுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி இருப்பது அரசியல் ஆர்வலர்கள் தரப்பில் நல்ல விஷயமாகவே பேசப்படுகிறது.