மைனர் வயது உடையவர்களும் பான் கார்டு வாங்கலாம்!! எப்படி தெரியுமா?
குடிமக்கள் அனைவருக்கும் தற்பொழுது பான் கார்டு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.வங்கி என தொடங்கி அனைத்து இடங்களிலும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் இதனை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்த பான் கார்டை அவர்களது பெற்றோர்கள் வாயிலாக மட்டும்தான் பெற முடியும்.மைனராக உள்ள ஓர் தனி நபரால் இதனை பெற இயலாது.
எப்படி குழந்தைகளின் வங்கி கணக்குகளுக்கு ஓர் கார்டியனாக பெற்றோர்கள் உள்ளார்களோ அதே போல தான் பான் கார்டு வாங்குபவர்களுக்கும் கட்டாயம் அவசியம்.
பான் கார்டு பெறுவதற்கு NSDL என்ற இணையதில் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யும்பொழுது பெற்றோரின் புகைப்படம் அவர்களின் ஆதார் அட்டை குழந்தைகளின் ஆதார் அட்டை குடும்ப அட்டை போன்ற ஆவணங்கள் கேட்கப்படும்.அதுமட்டுமின்றி இருப்பிட சான்று சமர்பிக்க வேண்டும்.
இவை அனைத்தையும் சரியாக கொடுத்துவிட்டு விண்ணப்ப கட்டணமாக 107 செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தியதும் இவர்களுக்கான விண்ணப்பித்த ரசீது கிடைத்துவிடும்.
இந்த ரசிதை வைத்து அவ்வப்போது இவர்களின் அப்ளை ஸ்டேட்டஸை அறிந்து கொள்ளலாம்.
15 நாட்களுக்குள் விண்ணப்பித்தவர்களின் கைகளில் அவர்களின் குழந்தைகளின் பான் கார்டு ஆனது கிடைத்துவிடும்.
குழந்தைகள் மேஜர் ஆகும் பொழுது பேன் கார்டில் இருக்கும் கார்டியன் என்பதை நீக்கி விட்டு உபயோகிக்கலாம்
மைனர் வயதுடைய குழந்தைகளுக்கு பான் இருப்பதன் மூலம் அவர்களின் பெயரில் முதலீடு செய்யும் பொழுது கட்டாயம் தேவைப்படும்.