நாள்பட்ட நுரையீரல் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்!

0
166
#image_title

நாள்பட்ட நுரையீரல் சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பாட்டி வைத்தியம்!

மழைக்காலம், குளிர்காலத்தில் ஏற்படக் கூடிய சாதாரண சளி பாதிப்பு நாளடைவில் நுரையீரலில் தேங்கி பலவித தொந்தரவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கெட்டி சளி கரைந்து வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்திய குறிப்பை ட்ரை பண்ணவும்.

சளியை குணமாக்கும் பாட்டி வைத்தியம்…

1)வெற்றிலை
2)மிளகு
3)பூண்டு

இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் நுரையீரல் சளி கரைந்து வெளியேறும்.

1)மிளகு
2)ஏலக்காய்
3)இஞ்சி
4)துளசி
5)வெற்றிலை
6)கற்பூரவல்லி

மிக்ஸி ஜாரில் 4 மிளகு, 1 ஏலக்காய், சிறு துண்டு இஞ்சி, 10 துளசி இலை, 1 வெற்றிலை, 1 கற்பூரவல்லி இலை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் நுரையீரல் சளி கரைந்து வெளியேறும்.

1)கற்பூரவல்லி
2)தேன்
3)மிளகு

உரலில் 2 கற்பூரவல்லி, 4 மிளகு போட்டு இடித்துக் கொள்ளவும். இதை 1 கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் சளி கரைந்து வெளியேறும்.