புதினா புலாவ்

0
110

புதினா புலாவ்

செய்ய தேவையான பொருட்கள்:

1. நெய் 3 மேசைக்கரண்டி, பிரியாணி இலை,பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, சீரகம் மிளகு, ஏலக்காய்.

2. வெங்காயம்- 2

3. தக்காளி -1

4. உப்பு இரண்டு தேக்கரண்டி

5. கரம் மசாலா -1 தேக்கரண்டி

6. புதினா இலைகள்

7. கொத்தமல்லி இலை

8. பாசுமதி அரிசி

9. முந்திரி வறுத்தது.

மசாலா விழுது தயாரிக்க:

1. இஞ்சி 1 துண்டு

2. பூண்டு நான்கு பற்கள்

3. பச்சை மிளகாய் 5

4. புதினா

5. கொத்தமல்லி இலை

6. தேங்காய் 1/4 கப்

செய்முறை:

மசாலா தயாரிக்க மிக்ஸியில் இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 4 பல், பச்சை மிளகாய் 5, புதினா ஒரு கைப்பிடி, கொத்தமல்லி இலை, தேங்காய் கால் கப் ஆகியவற்றை சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.

1.கடாயில் 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு, ஏலக்காய், சீரகம், பிரியாணி இலை, மிளகு ,அன்னாசிப் பூ போடவும்.

2. பின் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

3. வெட்டிய தக்காளி துண்டுகளைப் போட்டு வதக்கவும்.

4. நன்கு வதங்கியவுடன் அரைத்து வைத்த மசாலா பேஸ்ட் போடவும்.

5. 5 நிமிடம் கழித்து அதில் உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்துக் கிளறவும்.

6. இரண்டு கைப்பிடி புதினா இலை மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.

7. பின் பாசுமதி அரிசியை அதில் போடவும். நீங்கள் ஊற வைக்கத் தேவையில்லை அப்பொழுதுதான் அரிசி உதிரியாக இருக்கும்.

8. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.

9. இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அனைத்து விடவும்.

10. விசில் அடங்கியதும் திறந்து பார்த்தால் புதினா புலாவ் தயார்.

11. மேலும் சுவைக்காக வறுத்து வைத்த முந்திரிகளை அலங்காரம் செய்யலாம்.

சுவையான புதினா புலாவ் வீட்டில் செய்து பார்த்து அசத்துங்கள்.

 

Previous articleதனியார் மருத்துவமனை அனுமதி ரத்து! மாவட்ட நிர்வாகம் அதிரடி!
Next articleசாலையில் கேட்பாரற்று கிடந்த 4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள்:! நேர்மைக்கு கிடைத்த வெகுமதி!