தங்கம் விற்கும் விலைக்கு தினமும் தங்கத்தை கக்கும் அதிசய எரிமலை..!!
இயற்கை அழகானது மட்டுமல்ல ஆச்சரியமானதும் கூட இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நாம் அதிசயிக்கும் வகையில் இயற்கையில் சில விஷயங்கள் நடக்கும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது அண்டார்டிகாவில் நடந்துள்ளது. இதை கேட்டால் கேட்பவர்கள் நிச்சயம் இதை நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு ஒரு அதிசயமான நிகழ்வு தான் இது.
அதாவது உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட கண்டமான அண்டார்டிகாவில் 138 எரிமலைகள் உள்ளன. இதில் மவுண்ட் எரெபஸ் என அழைக்கப்படும் எரிமலை ஒன்று தினமும் லட்சக்கணக்கில் மதிப்புள்ள தங்கத்துகள்களை கக்கி வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பவில்லை என்றாலும் அதுதான் உண்மை.
இந்த எரிமலையில் இருந்து தினமும் வெளியேறும் தூசியில் தங்கத்துகள்கள் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல இந்த எரிமலையில் தினமும் வெளியேறும் தங்கத்தின் மதிப்பு தோராயமாக 5 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஒரு நாள் முழுவதும் இந்த தங்கத்துகள்களின் குவிப்பு 80கிராம் அளவு தங்கமாக உள்ளது என்று கூறுகிறார்கள்.
ஆனால் இந்த எரிமலையை அவ்வளவு எளிதில் நம்மால் அடையமுடியாது. ஏனெனில் இந்த பகுதி பூமியின் தெற்கு எரிமலை வெண்ட்டிலிருந்து 621 மைல் தொலைவில் இருப்பதால், தங்கத்தை சேகரிக்க முடியாது. அதுமட்டுமின்றி இந்த பகுதி முற்றிலும் பனியால் மூடப்பட்ட 12,448 அடி உயரத்தில் உள்ளது. இதனால் இங்கு சென்று இந்த தங்கத்துகள்களை சேகரிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.