புதிய சிலிண்டர் மாற்றும் போது ஏற்பட்ட விபரீதம்!! அரசு பள்ளியில் விபத்தினால் ஏற்பட்ட பரபரப்பு!!

Photo of author

By Amutha

புதிய சிலிண்டர் மாற்றும் போது ஏற்பட்ட விபரீதம்!! அரசு பள்ளியில் விபத்தினால் ஏற்பட்ட பரபரப்பு!!

Amutha

Updated on:

Mishap occurred while changing the new cylinder!! The excitement caused by the accident in the government school!!

 புதிய சிலிண்டர் மாற்றும் போது ஏற்பட்ட விபரீதம்!! அரசு பள்ளியில்  விபத்தினால் ஏற்பட்ட பரபரப்பு!! 

அரசு பள்ளியில் சிலிண்டர் மாட்டியதும் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து உண்டானது.

நன்னிலம் அருகே அரசு பள்ளியில் சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு உண்டானது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே ஆலங்குடியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க புதிய சிலிண்டர் மாற்றி சமையல் பணிகள் தொடங்கப்பட்டன.

அப்போது திடீரென சிலிண்டரில் ஏற்பட்டு தீப்பிடித்தது. இதன் காரணமாக சிலிண்டர் வெடிக்கும் அபாயம் இருந்ததால் பள்ளி மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக விரைந்து வந்து கேஸ் சிலிண்டரில் பற்றி இருந்த தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.