உடலை குறைக்க டயட் இருப்பவர்களா நீங்கள்… இந்த 5 பழங்களையும் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!

0
36

 

உடலை குறைக்க டயட் இருப்பவர்களா நீங்கள்… இந்த 5 பழங்களையும் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்…

 

உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் உடல் எடையை குறைப்பதற்காக டயட் இருப்பார்கள். அதாவது அளவான உணவு, அளவான உடல்பயிற்சி என்று டயட் இருப்பார்கள். அவ்வாறு டயட் இருப்பவர்களுக்கு இந்த பதிவு ஆகும்.

 

உடல் எடையை வேகமாக குறைக்க டயட் இருக்கும் அனைவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் 5 பழங்களை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக குறையத் தொடங்கும்.

 

உடல் எடையை குறைக்க டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஐந்து பழங்கள்…

 

* திராட்சை

* ஆப்பிள்

* பெர்ரி

* தர்பூசணி

* ஆரஞ்சு

 

திராட்சை பழம்

 

திராட்சையில் பொதுவாக குறைவான கலோரிகள் இருக்கின்றது. மேலும் திராட்சையில் உடலுக்கு தேவையான விட்டமின் சி சத்துக்களும் உள்ளது.

 

அதாவது 123 கிராம் அளவுள்ள திராட்சையில் வெறும் 37 கலோரிகள் மட்டுமே உள்ளது. மேலும் உடலுக்கு தேவையான விட்டமின் சி சத்துக்களை தினசரி 51 சதவீதம் திராட்சை வழங்குவதால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் திராட்சை பழத்தை சாப்பிடலாம்.

 

ஆப்பிள்

 

ஆப்பிள் பழத்திலும் குறைவான அளவு கலோரிகளே உள்ளது. ஆப்பிள் பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பினும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. அதாவது ஒரு முழு ஆப்பிள் பழத்தில் 116 கலோரிகளும் 5.4 அளவு நார்ச்சத்துக்களும் உள்ளன. ஆப்பிளும் உடல் எடையை குறைக்க டயட் இருப்பவர்கள் ஆப்பிளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

 

பெர்ரி பழம்

 

பெர்ரி இனத்தை சேர்ந்த அனைத்து பழங்களிலும் அதாவது ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி, ஸ்டாபெர்ரி, ராஸ்பெர்ரி என்று பெர்ரி பழ வகைகளிலும் குறைவான கலோரிகளே உள்ளது. அது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் அதிக அளவில் உள்ளது. இதனால் டயட் இருக்கும் அனைவரும் பெர்ரி பழங்களை சாப்பிடலாம்.

 

123 கிராம் அளவுள்ள ராஸ்பெர்ரி பழத்தில் 64 கலோரிகள் உள்ளது. அதே போல 152 கிராம் அளவுள்ள ஸ்டாபெர்ரி பழத்தில் 50 கலோரிகள் உள்ளது. மேலும் பெர்ரி பழங்களில் நார்ச்சத்துக்களும் அதிகளவில் உள்ளது.

 

தர்பூசணி

 

உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் அனைவரும் தாராளமாக தர்பூசணி பழத்தை எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணி பழத்தில் குறைவான அளவு கலோரிகளும் அதிக நீர்ச்சத்துகளும் உள்ளது. சுமார் 150 முதல் 170 கிராம் அளவு உள்ள தர்பூசணி பழத்தில் 46 முதல் 61 வரை கலோரிகள் உள்ளது. இதனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் தர்பூசணியை சாப்பிடலாம்.

 

ஆரஞ்சு பழம்…

 

ஆரஞ்சு பழமும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம். மற்றப் பழங்களைப் போலவே ஆரஞ்சு பழமும் குறைவான கலோரிகளையும், அதிகளவு நார்ச்சத்துக்களும் விட்டமின் சி-யும் இதில் உள்ளது. 140 கிராம் அளவுள்ள ஆரஞ்சு பழம் 69 கலோரிகளை கொண்டுள்ளது. இதனால் தாராளமாக உடல் எடையை குறைக்க ஆரஞ்சு பழத்தை சாப்பிடலாம்.