எம்.பி-யை காணவில்லை! மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

Photo of author

By Rupa

மதுரை பாராளுமன்ற தொகுதி எம் –பியாக 2வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் (திமுக கூட்டணி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசன். இவரை காணவில்லை என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்டியூர், சவுராஷ்டிராபுரம் உள்ளிட பகுதிகளில்  எம் –பியாக சு.வெங்கடேசன் காணவில்லைஎன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, அப் போஸ்டரில் கண்டா வரசொல்லுங்க என்ற தலைப்பிலும்,மதுரை பாராளுமன்ற தொகுதில் இரண்டு முறை வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றிகூட சொல்லவரவில்லை.

தங்களை இரண்டு முறை மதுரை எம்.பியாக  வெற்றி பெற வாக்களித்ததே வண்டியூர் மக்கள் எனவும் அம்மக்களுக்கு இது வரை நீங்கள் என்ன செய்தீர்கள்? என கேள்வி எழுப்பியும் வாசகங்கள் இடம் பெற்று இருந்தது. இப் போஸ்டர் விவகராம் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மதுரை மக்கள்  கூறுகையில் இரண்டு முறை எம்பியாக சு.வெங்கடேசன் வெற்றி பெற்றும் பொது மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கவில்லை என்றும், மதுரையின் பல இடங்களில் சாலை வசதிகள் சரிவர இல்லை என்றும் அதற்காக  எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க வில்லை என்று தங்களது குறைகளை தெரிவித்தார்கள், அண்மையில் பெய்த மழையினால் எற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்கு கூட வர வில்லை என தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்கள்.