காணாமல் போன புஷ்பவனம் குப்புசாமி மகள் என்ன ஆனார்? திடுக்கிடும் தகவல்!

Photo of author

By CineDesk

காணாமல் போன புஷ்பவனம் குப்புசாமி மகள் என்ன ஆனார்? திடுக்கிடும் தகவல்!

பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் நேற்று காணாமல் போனதாகவும் இதனையடுத்து சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் செய்ததாகவும் நேற்று செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தி கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து ஊடகங்களும் பரவி புஷ்பவனம் குப்புசாமி மகள் கடத்தப்பட்டாரா? காதலருடன் சென்று விட்டாரா? என்று பலவித தலைப்புகளுடன் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதனை அடுத்து தற்போது புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். நான் காணாமல் போகவில்லை, எனது பெற்றோருடன் நான் வீட்டில் தான் இருக்கிறேன். நான் காணாமல் போனதாக எப்படி ஒரு செய்தி வெளிவந்தது என்று எனக்கு தெரியவில்லை. மேலும் என் பெற்றோர்கள் எந்த காவல் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை.

காணாமல் போகாத ஒருவரைப் பற்றி யார் புகார் அளிப்பார்கள்? அதுமட்டுமின்றி எனது தந்தை நேற்று இரவில் இருந்து ஊரிலேயே இல்லை. பிறகு எப்படி அவர் புகார் அளித்திருப்பார். இப்படி ஒரு பொய் செய்தியை எப்படி பரவியது? அதை உறுதி செய்யாமல் எப்படி மீடியாக்கள் வெளியிட்டன என்பது எனக்கு தெரியவில்லை. இருப்பினும் என் மேல் அக்கறை கொண்டு என்னை விசாரித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி என்று அவர் அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார்.