எங்களை குடிமக்களாகக் கருதவில்லையென்றால் நாங்கள் உங்களை அரசாக கருத மாட்டோம் யார் சொன்னது தெரியுமா?

0
59

எங்களை நீங்கள் குடிமக்களாகக் கருதவில்லையென்றால் நாங்கள் உங்களை அரசாக கருத மாட்டோம். என ஜே.என்.யு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் பேசினார்!

குடியுரிமை சட்டத் திருத்தம் பா.ஜ.க அரசின் பெரும்பான்மையால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களின்போது போலிஸார் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் போலிஸார் மாணவர்களை தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம்வந்தன.

இந்நிலையில், பீகார் பூர்னியா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களைச் சந்தித்த ஜே.என்.யு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “எங்களை நீங்கள் குடிமக்களாகக் கருதவில்லையென்றால் நாங்கள் உங்களை அரசாக கருத மாட்டோம். நாடாளுமன்றத்தில் வேண்டுமானால் உங்களுக்கு பெரும்பான்மை இருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தில் எங்களுக்கு ஆதரவு இருக்கிறது.

இந்த போராட்டம் இஸ்லாமியர்களுக்கான போராட்டம் அல்ல; இந்தியா சாவர்க்கர் நாடாக மாறிவிடக் கூடாது என்பதற்கான போராட்டம். அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்காக நாம் மேற்கொண்டிருக்கும் சண்டை இது. அமைதியாகப் போராடி நம் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும்.” எனப் பேசினார்.மேலும், “எங்களுக்கு பா.ஜ.கவிடம் இருந்தும், ஆர்.எஸ்.எஸ்ஸிடம் இருந்தும் சுதந்திரம் தேவை” என முழங்கினார்.

author avatar
CineDesk