தமிழக அரசே மருத்துவமனையை காணவில்லை:! கிணறை காணவில்லை என்ற வடிவேல் பாணியில் ஒட்டப்பட்ட போஸ்டர்!!

0
171

தமிழக அரசே மருத்துவமனையை காணவில்லை:! கிணறை காணவில்லை என்ற வடிவேல் பாணியில் ஒட்டப்பட்ட போஸ்டர்!!

கரூர் குளித்தலை பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டியதால் அங்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

மாவட்டத்தின் முதல் பெரிய நகரத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு முன்பு அம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட வேண்டும் என்பது விதி.இந்நிலையில் கரூரில் அரசு கல்லூரி மருத்துவமனை தொடங்கப்படுவதற்கு முன் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான குளித்தலை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட வேண்டும்.ஆனால் இவ்வாறாக மாற்றம் செய்யாமலேயே தமிழ்நாடு சுகாதாரத்துறை,மாற்றம் செய்ததாக அறிவித்துவிட்டது.

இதனால் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே சர்ச்சை நீடித்து வந்தது.மேலும் அரசு கூறிய படியே அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்டிருந்தால் ஏன் இன்னும் பெயர் பலகையை மாற்றவில்லை என்றும் மக்களிடையே கேள்வி எழும்பியது.

இந்நிலையில் குளித்தலை பகுதி முழுவதும் ஒரு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது அதில்,காணவில்லை, தமிழ்நாடு அரசே.! கண்டுபிடித்து கொடு!. குளித்தலை அரசுதலைமை மருத்துவமனையை காணவில்லை. ஆகவே திருடி சென்றவர்களை கண்டுபிடித்து சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் அரசு தலைமை மருத்துவமனையை மக்களிடம் ஒப்படைத்திடு. இப்படிக்கு!.. தேடிக்கொண்டிருப்போர், பொதுமக்கள்,சமூக நல ஆர்வலர்கள்,போன்ற வாசகங்கள் அடங்கிய அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பெரும் சலசலப்பு நீடித்துள்ளது.

Previous articleதமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் திருமாவளவன்? பாஜக பகீர் குற்றச்சாட்டு!
Next articleவெட்டு ஒன்னு துண்டு ரெண்டு! அதிரடியில் இறங்கிய துரை வைகோ!