வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு! அதிரடியில் இறங்கிய துரை வைகோ!

0
357

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ தொடர்பான மாமனிதன் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தை மதிமுக வின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். இதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் இடையே உரையாற்றிய துரை வைகோ, தலைவர் இந்த இயக்கத்திற்காக 25 வருடங்கள் உழைத்திருக்கிறார். இனி அவருக்காக நாம் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக இருந்தது. பழையபடி இழந்ததை மீட்க வேண்டும். வரலாறு படைக்க வேண்டும் என்று இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நான் பல திட்டங்களை வைத்திருக்கிறேன். இயக்கத்தை எப்படி கொண்டு செல்ல வேண்டும். இழந்ததை மீட்போம் வரலாறு படைப்போம், அதற்கு ஒரு செயல் திட்டம் வைத்துள்ளேன். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும். மற்றவர்களுக்கு கதவு திறந்து வைக்கப்பட்டுள்ளது அவர்கள் வெளியே செல்லலாம். உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் மட்டுமே தான் மரியாதை. , வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான் என நிர்வாகிகளிடையே துரை வைகோ ஆவேசமாக பேசியுள்ளார்.

Previous articleதமிழக அரசே மருத்துவமனையை காணவில்லை:! கிணறை காணவில்லை என்ற வடிவேல் பாணியில் ஒட்டப்பட்ட போஸ்டர்!!
Next articleஓலா ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு 135 ரூபாய் கட்டண உயர்வு:! அதிர்ச்சியில் மக்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here