செக்ஸ் வாழ்க்கையில் தம்பதியர் செய்யக் கூடாத தவறுகள்!! இப்படி செய்தால் உறவே முறிந்திடும்!

கணவன்-மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்க தாம்பத்தியம் அவசியமாகும்.உடலுறவின் போது இருவருக்கும் ஒரு பரஸ்பர திருப்தி கிடைத்தால் மட்டுமே அந்த உறவு நீடிக்கும்.ஆரோக்கியமான செக்ஸ் கிடைக்கவில்லை என்றால் உடல் மற்றும் மனதளவில் பாதிப்பை சந்திக்க நேரிடும்.

உடலுறவின் போது துணையின் விருப்பத்தை பூர்த்தி செய்யாமல் இருந்தால் அது உறவில் விரிசலை உண்டாக்கும்.செக்ஸ் லைஃப்பில் ஆண்,பெண் செய்யக் கூடாத சில தவறுகள் என்னென்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

படுக்கை அறைக்கு சென்ற பின்னர் துணையுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்.துணைக்கு முக்கியத்துவம் தராமல் மொபைல் பயன்படுத்துவதில் மூழ்கிப் போனால் அது உறவில் பாதிப்பை உண்டாக்கும்.

உடலுறவு கொள்வதற்கு முன்னரும்,உடலுறுவு முடிந்த பின்னரும் துணையுடன் அன்பாக பேச வேண்டும்.துணைக்கு பிடித்த விஷயங்களை பேசுதல்,அவர்களை மகிழ்ச்சியாக்கும் விஷ்யங்களை பேசுதல் போன்றவற்றை செய்தால் செக்ஸ் வாழ்க்கை மேன்மையடையும்.

இரவு நேரத்தில் உடலுறவு கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.தாமதமாக உணவு எடுத்துக் கொள்வதால் உடலுறவின் போது வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,வயிறு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உடலுறவில் ஈடுபட முடியாமல் போய்விடும்.

அதேபோல் இரவு உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்.இதனால் வாய் துர்நாற்றம் ஏற்பட்டு உடலுறவின் போது அசௌகரிய சூழலை ஏற்படுத்தும்.

ஆண்கள் மது மற்றும் புகை பிடித்துவிட்டு உடலுறவில் ஈடுபடுவதை பெண்கள் விரும்புவதில்லை.இதுபோன்ற தீய பழக்கங்களால் ஆண்மை குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னர் தம்பதியர் குளிக்க வேண்டும்.வியர்வையுடன் உடலுறவில் ஈடுபடும் போது அதிக வியர்வை துர்நாற்றம் உண்டாகும்.இதனால் சங்கடமான சூழல் ஏற்படும்.