தற்பொழுது இளம் வயதிலேயே சைன்ஸ் பாதிப்பை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.காற்று மாசு,உணவு மாற்றம்,அலர்ஜி என்று சைனஸ் பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது.இந்த சைனஸ் பாதிப்பில் இருந்து மீள நினைத்தால் இந்த இரண்டு வைத்தியங்களில் ஏதேனும் ஒன்றை பின்பற்றுங்கள்.
சைனஸ் அறிகுறிகள்:
1.மூக்கில் நீர் வடிதல்
2.தலைவலி
3.சுவாசிக்க சிரமம்
சைனஸ் வருவதற்கான காரணங்கள்:
1.அதிகப்படியான சளி
2.மூக்கடைப்பு
3.ஒவ்வாமை
4.பாக்டீரியா தொற்று
5.சளி தொற்று
சைனஸை குணமாக்கும் எளிய வீட்டு வைத்தியம்:
தேவைப்படும் பொருட்கள்:-
**துளசி இலைகள் – இரண்டு தேக்கரண்டி
**மிளகு – நான்கு
**இஞ்சி – ஒரு பீஸ்
**தேன் – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:-
1)முதலில் துளசி இலைகளை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இதை கத்தி கொண்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
2)பிறகு நான்கு மிளகை உரலில் போட்டு இடித்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு பீஸ் இஞ்சி துண்டை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
3)இப்பொழுது அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பின்னர் அரைத்த துளசி சாறை சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
4)அடுத்து இடித்து வைத்துள்ள மிளகு மற்றும் இஞ்சி துண்டை போட்டு மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.
5)அதன் பிறகு பானத்தை கிளாஸிற்கு வடித்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் சைனஸ் பாதிப்பு குணமாகும்.
தேவைப்படும் பொருட்கள்:-
**பெப்பர் மின்ட் ஆயில் – 3 துளிகள்
**யூகலிப்டஸ் ஆயில் – 3 துளிகள்
**ரோஸ்மேரி ஆயில் – 3 துளிகள்
**தண்ணீர் ஒரு கப்
பயன்படுத்தும் முறை:-
1)பாத்திரம் ஒன்றில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஆவி வரும் வரை சூடுபடுத்தி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
2)பிறகு இந்த பாத்திரத்தில் மூன்று துளிகள் பெப்பர் மின்ட் ஆயில்,மூன்று துளிகள் யூகலிப்டஸ் ஆயில்,மூன்று துளிகள் ரோஸ்மேரி ஆயில் சேர்த்து ஆவி பிடித்தால் சைனஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட்டு விடலாம்.