இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பு மெழுகு போல் உருகி வர ஒரு டம்ளர் வெந்நீரில் இந்த பவுடர் கலந்து குடியுங்கள்!!

Photo of author

By Divya

இரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பு மெழுகு போல் உருகி வர ஒரு டம்ளர் வெந்நீரில் இந்த பவுடர் கலந்து குடியுங்கள்!!

உடல் ஆரோக்கியமாக இருக்க இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.ஆனால் இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்தால் அவை மாரடைப்பு,மூச்சு திணறல்,சர்க்கரை உள்ளிட்ட நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

இரத்த நாளங்கள் இதயத்திற்கும்,மூளைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கிறது.இவை இதயம் போல் சுருங்கி விரியும் தன்மை கொண்டது.இதில் கொழுப்புகள் படிந்தால் அவை பல வித நோய் பாதிப்புகள் ஏற்படும்.

இரத்த நாள குழாயில் கொழுப்பு அடைத்துக் கொள்வதால் மாரடைப்பு,பக்கவாதம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

எனவே இரத்த நாளங்களில் படிந்து கிடக்கும் கொழுப்புகளை இயற்கையான முறையில் கரைத்து வெளியேற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)அஸ்வகந்தா
2)மஞ்சள்
3)திரிபலா பொடி
4)பூண்டு வற்றல்

செய்முறை:-

100 கிராம் அஸ்வகந்தா,10 பூண்டு வற்றலை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பின்னர் இந்த பொடியில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்,5 தேக்கரண்டி திரிபலா பொடி சேர்த்து கலந்து விடவும்.

இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.இதை ஒரு கிளாஸில் ஊற்றி அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 30 நாட்களுக்கு குடித்து வந்தால் இரத்த நாளங்களில் அடைபட்டு கிடந்த கொழுப்புகள் கரைந்து வெளியேறி விடும்.

அதேபோல் எலுமிச்சை சாறு,இஞ்சி மற்றும் பூண்டு சாற்றை ஒரு கிளாஸ் நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்த நாளத்தில் தேங்கி கிடந்த கொழுப்புகள் கரைந்து வெளியேறும்.