இன்று பலருக்கு வாயு பிரச்சனை இருக்கிறது.சாப்பிடும் உணவு ஆரோக்கியமற்று இருப்பதால் வயிற்றில் கெட்ட வாயுக்கள் அதிகளவு தேங்கி வயிற்றுவலி,வயிறு உப்பசம்,மலச்சிக்கல்,குடல் அழுகல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
எனவே வாயுத்தொல்லை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை செய்து பலனடையுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)சீரகம் – 20 கிராம்
2)சுக்கு – ஒரு துண்டு
3)கருஞ்சீரகம் – 20 கிராம்
4)கொத்தமல்லி விதை – 25 கிராம்
5)ஏலக்காய் – ஒன்று
6)பெருங்காயம் – ஒரு கட்டி
7)புதினா இலை – பத்து
8)கறிவேப்பிலை – இரண்டு கொத்து
செய்முறை விளக்கம்:-
வாயுத் தொல்லையை போக்கும் அன்னப்பொடி எப்படி செய்வது என்பது குறித்து கீழே விளக்கப்பட்டிருக்கிறது.
*முதலில் 20 கிராம் சீகரத்தை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து வறுக்கவும்.அதோல் மற்ற அனைத்து பொருட்களையும் வாணலியில் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ளவும்.சுக்கை மட்டும் தோல் நீக்கிவிட்டு வறுக்க வேண்டும்.
*பிறகு அனைத்து பொருட்களையும் தட்டில் கொட்டி நன்கு ஆறவிடவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்களை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆறவிடவும்.
*பிறகு இதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் கொட்டி ஸ்டோர் செய்து கொள்ளவும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சில நிமிடங்களுக்கு சூடாக்கவும்.
*அடுத்து அரைத்த அன்னப்பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.5 நிமிடங்களுக்கு இதை ஆறவிட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் வாயுத் தொல்லை முழுமையாக நீங்கிவிடும்.
வாயுத் தொல்லையை போக்கும் மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)மோர் – ஒரு கப்
2)பெருங்காயத் தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
*முதலில் அரை கப் தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி மோர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
*பிறகு அடுப்பில் வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்த்து லேசாக வறுத்து ஆறவிடவும்.
*பெருங்காயம் ஆறியப் பிறகு வறுத்த பெருங்காயத் தூள் சேர்த்து கலக்கி குடித்தால் வாயுத் தொல்லை கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்:-
1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
*முதலில் ஒரு கிளாஸில் தண்ணீர் நிரப்பி ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊறவிடவும்.
*மறுநாள் இந்த சீரக நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை அனைத்தும் எளிதில் நீங்கிவிடும்.