இரவில் இந்த பொடியை நீரில் கலந்து குடித்தால் மோசமான வாயு எளிதில் வெளியேறி விடும்!!

Photo of author

By Divya

இரவில் இந்த பொடியை நீரில் கலந்து குடித்தால் மோசமான வாயு எளிதில் வெளியேறி விடும்!!

வயிற்றில் அதிகளவு கெட்ட வாயுக்கள் தேங்கி கிடந்தால் அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.பொது வெளியில் அனைவரது முன்னிலையிலும் வாயு தொல்லை ஏற்பட்டால் அவை நமக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தி விடும்.

செரிமானப் பிரச்சனை,வயிறு உப்பசம் உள்ளிட்ட பாதிப்புகளால் வயிற்றில் அதிகளவு வாயுக்கள் தேங்குகிறது.இதற்கு நீங்கள் உணவு முறையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

எளிதில் செரிக்க கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை சிரமமின்றி வெளியேற்றக் கூடிய உணவுமுறையை கடைபிடித்தல் வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமம்
2)சீரகம்
3)கொத்தமல்லி
4)சுக்கு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி ஓமம்,1/2 தேக்கரண்டி சீரகம்,ஒரு துண்டு சுக்கு மற்றும் 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதையை போட்டு மிதமான தீயில் வறுக்க வேண்டும்.வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது.

இதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு கிளாஸ் சூடு நீரில் போட்டு கலக்கி இரவு நேரத்தில் குடித்து வந்தால் வயிற்றில் தேங்கி கிடக்கும் மோசமான வாயுக்கள் முழுமையாக வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)கிராம்பு
2)மிளகு
3)சீரகம்
4)கொத்தமல்லி
5)மஞ்சள் தூள்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி சீரகம்,3 கிராம்பு,3 மிளகு,1/4 தேக்கரண்டி கொத்தமல்லி விதை மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

3 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இரவு உணவிற்கு பின்னர் குடிக்கவும்.இவ்வாறு செய்வதால் வயிற்றில் தேங்கி கிடந்த வாயுக்கள் முழுமையாக வெளியேறும்.